TA

QR குறியீடு என்றால் என்ன?

QR குறியீடு என்பதன் விரிவாக்கம் "Quick Response Code" "விரைவாக பதில் தரும் குறியீடு" ஆகும். எளிமையாக, முதன் முதலில் "சதுர பார் குறியீடுகள்" என்று தானியங்கி தொழில் துறைக்காக ஜப்பானில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஒரு பயனரிடம் இருந்து ஸ்மார்ட்போன்க்கு தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் இவை, காலண்டர் நிகழ்வுகள், தொலைபேசி எண்கள், குறுஞ்செய்திகள், தயாரிப்பு விவரங்கள், மின்னஞ்சல் செய்திகள் என பல்வகையான தகவல்கலை சேமிக்க பயன்படுகிறது. இவைகள் மேம்பட்ட மற்றும் இயந்திரங்களால் படிக்கக்கூடிய UPC பார்கோடுகள் போன்று செயல்படுகின்றன. தயாரிப்புகளின் பேக்கேஜிங், விளம்பர பலகைகள், விசிடிங் கார்டு, வணிக ஜன்னல்களில், விளம்பரங்கள் மற்றும் பொருட்களை கண்காணிக்க மற்றும் பொருட்களை அடையாளம் கொள்ள பயன்படுத்த முடியும்.

ஒரு QR குறியீட்டை படிக்க, அண்ட்ராய்டு போன்களில் "QR droid", iOS க்கு "RedLaser" மற்றும் பிளாக்பெர்ரிக்கு “QR code Scanner Pro” என்று உங்கள் டேப்லேட் அல்லது ஸ்மார்ட்போனில் QR குறியீடு வாசகர் பயன்பாட்டை நிறுவ வேண்டும். QR பயன்பாட்டை தொடங்கியவுடன் கேமரா தானாகவே ஆன் ஆகிவிடும். QR குறியீட்டுக்கு நேராக கேமராவை அசையாமல் வைக்கவும். QR பயன்பாடு ஒரு ஒலி எழுப்பியவுடன், குறியீட்டில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்களையும் காட்டும். சில பயன்பாடுகள் உங்கள் வலை உலாவியில் குறியீட்டில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட இணைப்பிற்கு உங்களை எடுத்து செல்லும்.

QR குறியீடுகள் எங்கே, எப்படி பயன்படுத்தப்படுகின்றன?

உங்களை பற்றிய தகவலை பகிர்வதில் இருந்து வணிக மார்க்கெட்டிங் செய்வது வரை QR குறியீடுகளை பல வழிகளில் பயன்படுத்தலாம். QR குறியீடுகள் பயன்படுத்துவது குறித்து ஒரு சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (வணிகத்தில் QR குறியீடுகள் பயன்பாட்டை பற்றிய விரிவான தகவல்களை அறிய இந்த இணைப்பை பார்க்கவும்):

வணிக அட்டைகள் (விசிடிங் கார்டு)/ விளம்பர பொருட்கள்

உங்கள் வணிக அட்டைகள், தகவல் மற்றும் பிரசுரங்கள் மீது QR குறியீடுகள் அச்சிடுவதால், இதனை ஸ்கேன் செய்தவுடன் ஒரு ஸ்மார்ட்போனில் முகவரி புத்தகத்தில் உங்கள் தொடர்பு விவரங்கள் சேமிக்கபடும் அல்லது உங்கள் வணிகத்தை பற்றிய ஒரு விரிவான விளக்க வலைப்பக்கத்தை காண்பிக்க முடியும். இவைகளை சுய விளம்பரத்துக்காக டி-ஷர்ட்டுகளில் இருந்து விளம்பர பலகைகள் மற்றும் விமானத்தில் கூட, எல்லா இடங்களிலும் எதையும் அச்சிட முடியும்.

நிகழ்வு டிக்கெட்

நீங்கள் ஒரு நிகழ்விற்கான ஒருங்கிணைப்பாளர் என்றால், ஒரு QR குறியீடு சேர்த்து அதில் ஒரு RSVP பக்கதிற்கான (பிரஞ்சு வார்த்தையின் சுருக்கம் - பதில் அளியுங்கள் என்று அர்த்தம்), இணைப்பையும், நிகழ்வு நடக்கும் இடத்தின் ஜிபிஎஸ் குறிகளை அளிக்கலாம். இதன் மூலம் ஒரு பார்வையாளர் அவரது வருகையை உறுதி செய்ய முடியும் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அவரது ஸ்மார்ட்போனில் உள்ள வழி காட்டும் பயன்பாட்டில் குறித்து கொள்ள முடியும்.

தயாரிப்பு பேக்கேஜிங் / தயாரிப்பு கண்காணிப்பு / வாடிக்கையாளர் விமர்சனங்கள், அனைத்தும் நேரடியாக

நீங்கள் தயாரிப்பு பேக்கேஜிங் செய்த பின் அதில் இறுதியாக QR குறியீடுகள் சேர்த்து உங்கள் வணிகம் மற்றும் பொருட்களை பற்றிய வலை பக்கதிற்கு வாடிக்கையாளர்களை இணைக்க முடியும். இணைப்பில் தயாரிப்பின் விளக்கம் மற்றும் அதன் நன்மைகள், பயனர் கையேடுகள், வாடிக்கையாளர் சேவை தொடர்புகள் மற்றும் நிறுவனத்தை பற்றிய பொது தகவல்கள் தர முடியும்.

QR குறியீடுகள் வகைகள்

QR குறியீடுகள் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: டைனமிக் மற்றும் நிலையானது:.

டைனமிக் குறியீடுகள், "லைவ் QR குறியீடுகள்" என குறிப்பிடப்படுகிறது

உருவாக்கப்பட்ட பின், தங்களது பிரதான இலக்கு இணைப்பை குறியீட்டை மாற்றாமல் திருத்த முடியும். ஸ்கேன் செய்யும் போது, டைனமிக் குறியீடு ஸ்கேன்னுக்கு தகுந்த தகவல் சேமிக்கப்பட்டுள்ள ஒரு கணினிக்கு உங்களை திருப்பி விடும். டைனமிக் குறியீடுகள் வசதியாக உள்ளன ஏனெனில் ஒரு முறை உருவாக்கி, அச்சிட்டால் போதும். அவை காட்டும் தகவல் இணைப்பை நீங்கள் மாற்றலாம்.

நிலையான குறியீடுகள்

டைனமிக் குறியீடுகள் போலல்லாமல், நிலையான QR குறியீடுகள் ஒரு உரை வடிவில் நேரடியாக தகவல்களை சேமிக்கின்றன அல்லது இரண்டாம் இணைப்பு மூலமாக திருப்பி விடாமல் நேரடியாக இணைய பக்கங்களை வழங்கும். இதனால் தகவல் மற்றும் இணைப்பை மாற்ற அல்லது, திருத்த முடியாது என்று அர்த்தம். (நீங்கள் ஒரு புதிய நிலையான குறியீட்டை ஒவ்வொரு முறையும் உருவாக்க வேண்டும்) நிலையான குறியீடுகள் நிரந்தர தகவல் கொண்ட குறியீடுகள் விரும்பும் மக்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. (எ.கா., தங்கள் பிறந்த தேதி மற்றும் இரத்த வகை பற்றிய தகவல்)

எது சிறந்தது: இயங்குநிலை (டைனமிக்) அல்லது நிலையான குறியீடுகள்?

நிலையான குறியீடுகள் நேரடியாக பயனுள்ள தகவல் கொண்டிருக்கின்றன. இதனால் நீங்கள் கண்காணிக்க மற்றும் இந்த குறியீடுகளில் உள்ள தகவலை நிர்வகிக்க முடியாது. இந்த குறியீடுகள் மிகவும் சிரமமாக இருக்க கூடும் ஏனெனில் தேவைப்பட்டால் முன்னர் அச்சிடப்பட்ட பொருட்களை மறுபதிப்பு செய்யாமல் காட்டப்படும் தகவலை மாற்ற முடியாது.

டைனமிக் குறியீடுகளில் சிறப்பு வலை சேவையகங்களுக்கான இணைப்புகள் இருக்கின்றன. இதில் என்ன இணையதள இணைப்புகளுக்கு வழி திருப்ப வேண்டும் அல்லது என்ன தகவல்களை எப்போது காட்ட வேண்டும் என்று செயலிகள் இருக்கும். இதன் மூலம் நீங்கள் அந்த டைனமிக் குறியீட்டை கண்காணிக்க முடியும் (புள்ளிவிபர தகவல்களை சேகரிக்க), மற்றும் தங்களது பிரதான இலக்கு இணைப்பை, குறியீட்டை மாற்றாமல் திருத்த முடியும். இதன்மூலம் டைனமிக் குறியீடுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும் விதமாக அமைகிறது அதாவது நீங்கள் முன்பு அச்சிடப்பட்ட பொருட்கள் மீது மறுபதிப்பு செய்ய தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இலக்கு இணைப்பை மாற்ற வேண்டும். இந்த வசதி நிலையான குறியீடுகளில் இல்லை. அச்சிடப்பட்ட பிறகும் கூட டைனமிக் குறியீடுகள் மூலம் காட்டப்படும் தகவலை கட்டுப்படுத்த முடியும் என்ற பெரும் வசதி நிலையான குறியீடுகள் ஒப்பிடுகையில் டைனமிக் குறியீடுகள் தேர்வுக்கு ஆதரவாக இருக்கிறது. (எ.கா., பிரதிகள் நிறைய அச்சிடப்பட்ட பிறகு, குறியீடுகளை மீண்டும் கண்டுபிடிப்பதே இயலாத காரியம்)

நிலையான குறியீடுகள் பரவலாக கிடைக்கும் இலவச பிரிவில் உள்ளன, ஏனெனில், இதில் எந்த தொழில்நுட்ப தேவைகளும் சுமத்த வேண்டாம். ஆனால் இயங்குநிலை குறியீடுகள் சர்வர்களுக்கு வேலை வைத்து கொண்டே இருக்கும். எனவே, இலவச QR குறியீடுகள் வழங்கும் வலைத்தளங்கள் பொதுவாக நிலையான QR குறியீடுகளை இலவசமாகவும் மற்றும் டைனமிக் QR குறியீடுகளை கட்டணம் பெற்று வழங்குகின்றன.

நீங்கள் TrustThisProduct கொண்டு என்ன செய்ய முடியும்?

TrustThisProduct சேவை மூன்று டைனமிக் QR குறியீடுகளை உருவாக்க, நிர்வகிக்க மற்றும் Me24.info, About24.info, MyPet24.info களங்களில் இருந்து கண்காணிக்கும் வாய்ப்பை (இலவசமாக) வழங்குகிறது . அதே நேரத்தில், (சம்பந்தப்பட்ட சர்வர்கள் அடிப்படையில்) இந்த டைனமிக் குறியீடுகள் சர்வர் அடிப்படையிலான, பல சர்வர் ஒதுக்கீடு மற்றும் புவியியல் டிஎன்எஸ் அங்கீகாரம் கொண்ட TrustThisProduct வணிக தொழில்நுட்பம் மேடையில் இருக்கும்.

நீங்கள் ஒரு தொழில் அதிபர் அல்லது ஒரு வியாபாரத்தின் பிரதிநிதியாக இருந்தால் மற்றும் உங்கள் வணிகத்திற்கு டைனமிக் QR குறியீடுகள் பயன்படுத்த விரும்பினால், TrustThisProduct இன் சேவை பிரிவு (இணைய இணைப்பு: PVCode.com ) பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். நீங்கள் இலவசமாக மூன்று டைனமிக் QR குறியீடுகள் உருவாக்க முடியும் மற்றும் கூடுதல் சேவை செயல்பாடுகளை பயன்படுத்த முடியும் (எ.கா., நுகர்வோர் மொழியில் தகவல்களை தானாக காட்டுவது, TrustThisProduct.com களத்தில் இருந்து தகவல்களை காட்டுவது , பல பயனர் கணக்கு, கூடுதல் மார்க்கெட்டிங் தரவுகளை சேகரித்தல், மற்றும் பிற செயல்பாடுகள் பெறலாம்). TrustThisProduct வணிக பதிப்பு பற்றிய மேலும் தகவலுக்கு, பிரசுரத்தை பார்க்கவும்.

முடிவுரை

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் எதிர்முனையாளர்களுக்கு விரைவில் கிட்டத்தட்ட எந்த செலவுமின்றி, ஒரு பெரிய அளவு பயனுள்ள மற்றும் நம்பகமான தகவல்களை வழங்குவதால், QR குறியீடுகள் வணிக துறையில் பிரபலம் அடைந்து வருகின்றது. எங்கள் சேவையை பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது புதிய யோசனைகளை தெரிவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம் மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: நாங்கள் உங்களுடன் பேச சந்தோஷமாக காத்திருக்கிறோம்.

TrustThisProduct®:

Copyright © 2014-2016, PVCode LLC
நாம் சிக்கலானதை எளிமைப்படுத்துகிறோம்

முதன்மை பக்கம்